ADDED : ஜூலை 03, 2026 10:11 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் நாட்டு நலப் பணித்திட்டம் சார்பில், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்களுக்கு ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக கூட்ட அரங்கில் நடந்த புத்தாக்க பயிற்சி முகாமிற்கு முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினி தலைமை வகித்தார். நேர்முக உதவியாளர் கர்ணன் முன்னிலை வகித்தார். அனைவரையும் மாவட்ட தொடர்பு அலுவலர் மங்களநாதன் வரவேற்றார்.
உதவி மாவட்ட தொடர்பு அலுவலர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார். 45 பள்ளி என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
