/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கை சென்று திரும்பிய அகதி கைது
/
இலங்கை சென்று திரும்பிய அகதி கைது
ADDED : பிப் 20, 2025 02:08 AM
ராமேஸ்வரம்:அடிதடி வழக்கில் இருந்து தப்பிக்க, கள்ளத்தனமாக இலங்கை சென்று திரும்பிய இலங்கை அகதியை போலீசார் கைது செய்தனர்.
இலங்கை மன்னார் பகுதியை சேர்ந்தவர் வாசுதன் 35. இவர் குடும்பத்துடன், 2015ல் அகதியாக தனுஷ்கோடி வந்து ராமேஸ்வரம் அருகே மண்டபம் முகாமில் தங்கி இருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன், மண்டபத்தில் நடந்த அடிதடியில் வாசுதன் முக்கிய குற்றவாளியாக உள்ளார்.
வழக்கு விசாரணைக்கு ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், தனக்கு சிறை தண்டனை கிடைத்து விடுமோ என்ற அச்சத்தில், 7 மாதங்களுக்கு முன் கள்ளத்தனமாக படகில் இலங்கை தப்பிச் சென்றார். வழக்கில் ஆஜராகாததால், நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இலங்கை சென்ற வாசுதனின் மனைவி, குழந்தைகள் மண்டபம் முகாமில் இருந்ததால், மீண்டும் விமான மூலம் சென்னை வந்திறங்கி, நேற்று முன்தினம் மண்டபம் வந்தார். தகவலறிந்த க்யூ பிரிவு போலீசார், வாசுதனை பிடித்து மண்டபம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
வாசுதனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.