/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கைக்கு அனுப்பி வைக்க கோரி முழங்காலிட்டு அடம் பிடித்த அகதி
/
இலங்கைக்கு அனுப்பி வைக்க கோரி முழங்காலிட்டு அடம் பிடித்த அகதி
இலங்கைக்கு அனுப்பி வைக்க கோரி முழங்காலிட்டு அடம் பிடித்த அகதி
இலங்கைக்கு அனுப்பி வைக்க கோரி முழங்காலிட்டு அடம் பிடித்த அகதி
ADDED : டிச 12, 2024 05:07 AM

ராமநாதபுரம்: இலங்கை அகதி ஜாய் 37, அவரது நாட்டிற்கு அனுப்பி வைக்க கோரிராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் முழங்காலிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் கூறியதாவது:
சிறுவயதில் இலங்கையில் இருந்து படகில் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி வந்தேன். என்னை கைது செய்து 3 முறை சென்னை புழல் சிறையில் அடைத்தனர். 6 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளேன்.
தற்போது வெளியே வந்த நிலையில் ஆவணங்கள் இல்லாமல் மண்டபம் முகாமில் தங்க முடியவில்லை.
ராமநாதபுரத்தில் வேலை தரவும் மறுக்கின்றனர். ரோட்டில் படுத்து உறங்கி கோயிலில் அன்னதானம் சாப்பிடுகிறேன். எந்த முகவரியும் இல்லாமல் சிரமப்படுகிறேன்.
எனக்கு தமிழகத்தில் அடையாள அட்டை தரவும் மறுப்பதால் இலங்கைக்கு அனுப்பி வைக்கக் கோரி போராடி வருகிறேன்.
எனது ஆவணங்களை அதிகாரிகள், போலீசார் தர மறுக்கிறார்கள். தமிழக அரசு உதவ வேண்டும் என்றார்.
அப்போது முழங்காலிட்டு அடம் பிடித்து போராடியதால் அவரை போலீசார் அப்புறப்படுத்த முயன்றதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன் பிறகு கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பிரபாகர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
உங்கள் மீது வழக்கு உள்ள தனுஷ்கோடி போலீஸ் ஸ்டேஷனில் ஆவணங்கள், விபரங்களை பெற்று அதன் பிறகு முகாமில் தங்க வைக்கவோ, அல்லது இலங்கைக்கு அனுப்ப உதவி செய்வதாக பிரபாகர் தெரிவித்தார்.