/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கைக்கு தப்பிய அகதியால் கடல் பாதுகாப்பில் கேள்விக்குறி
/
இலங்கைக்கு தப்பிய அகதியால் கடல் பாதுகாப்பில் கேள்விக்குறி
இலங்கைக்கு தப்பிய அகதியால் கடல் பாதுகாப்பில் கேள்விக்குறி
இலங்கைக்கு தப்பிய அகதியால் கடல் பாதுகாப்பில் கேள்விக்குறி
ADDED : மே 06, 2025 07:44 AM

ராமேஸ்வரம்: -ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் இருந்து படகில் கள்ளத்தனமாக இலங்கை சென்ற அகதியை, அந்நாட்டு கடற்படையினர் கைது செய்தனர்.
இலங்கை மன்னாரைச் சேர்ந்தவர் தங்கையா செல்வராஜ், 62. இவர், 2023ல் அகதியாக தனுஷ்கோடி வந்து மண்டபம் முகாமில் தங்கினார்.
முகாமில் உள்ள இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அகதி புவனேஸ்வரனின் பைபர் கிளாஸ் படகில் மீன்பிடித்து வந்தார்.
மண்டபம் தோணித்துறை கடற்கரையில் நிறுத்தி இருந்த அப்படகில், நேற்று முன்தினம் இரவு, தங்கையா செல்வராஜ் கள்ளத்தனமாக புறப்பட்டு இலங்கை நோக்கி சென்றார்.
இலங்கை நெடுந்தீவில் தஞ்சம் அடைந்தபோது, அங்கு நேற்று காலை ரோந்து வந்த கடற்படை வீரர்கள், அவரை கைது செய்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மன்னார் வளைகுடா கடல் மற்றும் பாக்-ஜலசந்தி கடலில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள மத்திய, மாநில பாதுகாப்பு படையினரின் கண்ணில் படாமல், கள்ளப்படகில் தங்கையா செல்வராஜ், இலங்கை தப்பிச்சென்ற சம்பவம், இப்பகுதி கடல்வழி பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.