UPDATED : அக் 24, 2026 06:38 PM
ADDED : அக் 24, 2026 06:34 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்:
தமிழக ஆசிரியர் கூட்டணி ராமநாதபுரம் வட்டாரக் கிளை தேர்தல் வள்ளல் பாரி நடுநிலைப் பள்ளியில் நடந்தது. அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன் துவக்கி வைத்தார். மாவட்டத் தலைவர் அருள், செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் சத்குருகுமார், மகளிர் அணி செயலாளர் நவரெத்தினம் சிறப்பு பார்வையாளர்களாக பங்கேற்றனர்.
தேர்தலில் வட்டார தலைவராக சரவணன், செயலாளராக கருமலை மற்றும் உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டு பொறுப்பேற்றனர்.
