sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

நெல் கொள்முதல் மையத்தில் பதிவு செய்வதற்கு அலைக்கழிப்பு: அடங்கல் சான்று வாங்க சிரமப்படும் விவசாயிகள் 

/

நெல் கொள்முதல் மையத்தில் பதிவு செய்வதற்கு அலைக்கழிப்பு: அடங்கல் சான்று வாங்க சிரமப்படும் விவசாயிகள் 

நெல் கொள்முதல் மையத்தில் பதிவு செய்வதற்கு அலைக்கழிப்பு: அடங்கல் சான்று வாங்க சிரமப்படும் விவசாயிகள் 

நெல் கொள்முதல் மையத்தில் பதிவு செய்வதற்கு அலைக்கழிப்பு: அடங்கல் சான்று வாங்க சிரமப்படும் விவசாயிகள் 


ADDED : ஜன 24, 2025 07:24 AM

Google News

ADDED : ஜன 24, 2025 07:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையால் அறுவடை பணிகள் தாமதமாக துவங்கியுள்ள நிலையில் காப்பீடு பதிவு செய்ய பயன்படுத்திய மூவிதழ் அடங்கலை வைத்து அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் ஆன்-லைனில் பதிவு செய்ய மறுக்கின்றனர். இதனால் மீண்டும் அடங்கல் சான்று பெற வி.ஏ.ஓ., தாலுகா அலுவலகத்திற்கு அலைய வேண்டியுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மானாவாரியாக கண்மாய் பாசனத்தில் 1 லட்சத்து 28 ஆயிரம் எக்டேரில் ஆண்டுதோறும் நெல் சாகுபடி நடக்கிறது. 2024ம் ஆண்டில் 60 அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் 10 ஆயிரத்து 300 டன் நெல் கொள்முதல் செய்தனர்.

இவ்வாண்டில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், கடலாடி, கமுதி, முதுகுளத்துார் பகுதியில் நேரடி கொள்முதல் மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். முதற்கட்டமாக அறுவடை நடைபெறும் இடங்களில் மட்டும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் கூறியதாவது: மழையால் அறுவடைப் பணி பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்றால் காப்பீடு பதிவிற்கு பயன்படுத்திய மூவிதழ் அடங்கலை ஏற்க மறுக்கின்றனர். எனவே நெல்கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் சிறப்பு முகாம் நடத்தி உரிய ஆவணங்கள் உள்ள விவசாயிகளுக்கு உடனுக்குடன் வருவாய்துறையினர் அடங்கல் சான்று வழங்க கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என விவசாயிகள் கூறினர்.

மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகம் பொது மேலாளர் மெர்லின் டாரதி: சன்ன ரகம் குவிண்டால் (100 கி கி) ரூ. 2450 மற்றும் பொது ரகம் குவிண்டால் (100 கி கி) ரூ. 2405க்கு கொள்முதல் செய்யப்படும். மழையால் அறுவடை பணி பாதிக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே அறுவடை நடந்துள்ள 30 இடங்களில் நெல் கொள்முதல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

மூவிதழ் சான்றிதழ் நகலை வைத்து ஆன்-லைனில் பதிவு செய்ய முடியாது. புதிதாக வி.ஏ.ஓ., கையொப்பம் இட்ட அடங்கல் சான்றிதழ் கொண்டுவர கூறுகிறோம். இந்த நடமுறை எல்லா மாவட்டங்களில் உள்ளது. விவசாயிகள் தங்களது விபரங்களை கொள்முதல் அலுவலக பணியாளர்கள் உதவியுடன் www.tncsc-edpc.in என்ற இணையதளத்தில் உள்ளீடு செய்து கொள்முதல் செய்ய வேண்டும். இதற்குரிய படிவத்தை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பெற்றுக்கொள்ளலாம். விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக நெல் கொள்முதலுக்குண்டான பணம் செலுத்தப்படுகிறது என்றார்.






      Dinamalar
      Follow us