/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொடர் மழையால் நிரம்பும் ரெகுநாதபுரம் நீர்நிலைகள்
/
தொடர் மழையால் நிரம்பும் ரெகுநாதபுரம் நீர்நிலைகள்
ADDED : நவ 18, 2024 06:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரெகுநாதபுரம் : கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழைபெய்து வருவதால் ரெகுநாதபுரம், அதனை சுற்றியுள்ள குளங்கள், ஊருணிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ராமநாதபுரம் அருகேயுள்ள ரெகுநாதபுரம், பத்ராதரவை, நயினா மரைக்கான், வண்ணாங்குண்டு, தினைக்குளம் உள்ளிட்ட இடங்களில் குளங்கள், ஊருணிகள் உள்ளன. தற்போது கடந்த சிலநாட்களாக பெய்துவரும் மழையால் மஞ்சக்குளம் காளியம்மன் கோயில் குளம் நிரம்பி மறுகால்ஓடுகிறது.
இதுபோல ரெகுநாதபுரம், அதனை சுற்றியுள்ள குளங்கள், ஊருணிகளுக்கு நீர்வரத்த அதிகரிப்பால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.