/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
யாசகம் பெறுவோருக்கு மறுவாழ்வு இல்லம்
/
யாசகம் பெறுவோருக்கு மறுவாழ்வு இல்லம்
ADDED : ஜன 13, 2025 06:24 AM
ராமநாதபுரம் : யாசகம் பெறுபவர்களுக்கு மறு வாழ்வு இல்லம் அமைக்க தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் யாசகம் கேட்டல் தடுத்தல் சட்டத்தின் கீழ் அரசு நிதியுதவியுடன் புதிதாக யாசகம் பெறுவோர்க்கான மறு வாழ்வு இல்லம் அமைக்கப்படவுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து இதற்கான கருத்துருவுடன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விருப்பமுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கருத்துருவுடன் விண்ணப்பத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, கலெக்டர் அலுவலக வளாகம், நீதிமன்றம் தென்புறம் ராமநாதபுரம்- 623 503, என்ற முகவரிக்கு ஜன., 28 மாலை 5:45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இது தொடர்பான விபரங்களுக்கு மேலே கண்ட முகவரியில் தொடர்பு கொண்டு தகவல்களை அறிந்து கொள்ளலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.