/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி நகராட்சியில் வீணாகிய குப்பை வண்டிகள் சீரமைப்பு
/
பரமக்குடி நகராட்சியில் வீணாகிய குப்பை வண்டிகள் சீரமைப்பு
பரமக்குடி நகராட்சியில் வீணாகிய குப்பை வண்டிகள் சீரமைப்பு
பரமக்குடி நகராட்சியில் வீணாகிய குப்பை வண்டிகள் சீரமைப்பு
ADDED : ஜன 29, 2024 05:16 AM

பரமக்குடி: பரமக்குடி நகராட்சியில் குப்பை வண்டிகள் ஆறு மாதமாக வீணாகி கிடந்த நிலையில் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டு வருகிறது.
பரமக்குடி நகராட்சியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் நிலையில தினம் தோறும் மக்கும்,மக்காத குப்பையை பிரித்து அள்ளப்பட்டு வருகிறது.இதன்படி வீடுகளில் பொதுமக்கள் குப்பையை பெரும்பாலும் பிரித்து வழங்குகின்றனர்.
இதனால் துாய்மை இந்தியா திட்டத்திற்கு பொதுமக்கள் பெரும்பாலானோர் ஒத்துழைப்பு அளிக்கின்றனர். இந்நிலையில் முன்பு தானியங்கி குப்பை வாகனத்தில் குப்பை அள்ளப்பட்டு வந்த நிலையில் அவை அனைத்தும் வீணடிக்கப்பட்டுள்ளது.
தற்போது மூன்று சக்கர வாகனங்களில் மட்டுமே குப்பையை ஊழியர்கள் கொண்டு செல்லும் நிலை உள்ளது. இதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 36 வார்டுகளில் கொண்டு செல்ல மூன்று சக்கர வாகனங்கள் வாங்கப்பட்டன.
இவற்றில் ஒப்பந்ததாரர் சக்கரங்களை மாட்டிச் செல்லாமல் அப்படியே விட்டு வைத்ததால் குப்பை வண்டிகள் வீணாகியது. இதுகுறித்து டிச. 8ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக குப்பை வண்டிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.