/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பேரிடர் மீட்பு பணிகள் ஒத்திகை பயிற்சி
/
பேரிடர் மீட்பு பணிகள் ஒத்திகை பயிற்சி
ADDED : அக் 16, 2024 04:04 AM
கீழக்கரை : வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக மன்னார் வளைகுடா கடலோரப் பகுதிகளை ஒட்டிய இடங்களில் பேரிடர் மீட்பு குறித்த ஒத்திகை பயிற்சி நடக்கிறது. ஏர்வாடி அருகே கல்பார் புயல் காப்பக மையத்தில் பேரிடர் காலங்களில் மீட்பு பணிகள் குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
முதல் நிலை பொறுப்பாளர்கள், ஆப்தா மித்ரா பொறுப்பாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையுடன் இணைந்து பேரிடர் காலங்களில் மீட்பு மற்றும் முதலுதவி நிவாரணப் பணிகள் மேற்கொள்வது தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
ஏர்வாடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் கணேசன், ஜெயராமன், கீழக்கரை தாசில்தார் முகமது ஜமாலுதீன், ஆர்.ஐ., வி.ஏ.ஓ., மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் பங்கேற்றனர். முகாமில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.