/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இளைஞர்கள் மீது பொய் வழக்கு பதிந்ததாக போலீசார் மீது கலெக்டரிடம் உறவினர் புகார்

ADDED : ஜூலை 22, 2025 03:36 AM

ராமநாதபுரம்: பெருங்குளம் அருகே குமராண்டி வலசை கிராம இளைஞர்கள் மீது கேணிக்கரை போலீசார் பொய்யாக கஞ்சா வழக்கு பதிந்துள்ளதாக ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.
குமராண்டி வலசையை சேர்ந்த முருகானந்தம் மனைவி உலகம்மாள், அவரது உறவினர்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில், ஊர் கோயில் திருவிழா தொடர்பாக பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது எனது மகன் ஹரிஹரன் மற்றும் எங்கள் ஊரைச் சேர்ந்த சிவகணேஷ் ஆகியோரை ஒரு புகார் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என கேணிக்கரை போலீசார் அழைத்துச் சென்றனர். அதன் பிறகு அவர்கள் மீது கஞ்சா வழக்கு பதிந்துள்ளனர். இது பொய் வழக்காகும்.
ஹரிஹரன் கல்லுாரியில் 2ம் ஆண்டு படிக்கிறார். அவரது எதிர்காலத்தை போலீசார் பாழாக்கி விட்டனர். எனவே கலெக்டர் விசாரணை செய்து மேற்படி வழக்கில் இருந்து எனது மகனை நீக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.