/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி பலி உறவினர்கள் போராட்டம்
/
அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி பலி உறவினர்கள் போராட்டம்
அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி பலி உறவினர்கள் போராட்டம்
அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி பலி உறவினர்கள் போராட்டம்
ADDED : ஆக 03, 2025 02:16 AM
முதுகுளத்துார்:ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே கிருஷ்ணாபுரம் விவசாயி சித்திரைவேல் அறுந்து கிடந்த உயர் அழுத்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி இறந்தார். மகன் காயம் அடைந்தார். மின்வாரியத்தை கண்டித்து உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முதுகுளத்துார் அருகே கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் சித்திரைவேல் 50, மேலத்துாவல் பகுதியில் ஆட்டுக்கிடை அமைத்துள்ளார். நேற்று காலை அங்கு சென்ற போது அறுந்து கிடந்த உயரழுத்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சித்திரைவேல் இறந்தார். அவரை காப்பாற்ற வந்த மகன் பிளஸ் 1 மாணவன் கிஷோர்குமார் காயமடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கீழத்துாவல் போலீசார் விசாரிக்கின்றனர்.
சில நாட்களுக்கு முன்பே மின் கம்பம் சாய்ந்து உயரழுத்த மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது. இதையடுத்து ஒரு பகுதிக்கு மட்டும் செல்லும் மின்சப்ளையே நிறுத்தி வைத்துள்ளனர். இருந்த போதும் அருகில் செல்லும் மின்னழுத்த கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து சித்திரைவேல் உயிரிழந்தார்.
மின்வாரிய அதிகாரிகள் அலட்சியத்தால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மின்வாரிய அதிகாரிகள் மீது வழக்கு பதிய வேண்டும் எனக்கூறி முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
தாசில்தார் கோகுலாத், டி.எஸ்.பி., சண்முகம், மின்வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.