/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாலிபரை அரிவாளால் வெட்டியவர்களை கைது செய்யக்கோரி உறவினர் பஸ் மறியல்
/
வாலிபரை அரிவாளால் வெட்டியவர்களை கைது செய்யக்கோரி உறவினர் பஸ் மறியல்
வாலிபரை அரிவாளால் வெட்டியவர்களை கைது செய்யக்கோரி உறவினர் பஸ் மறியல்
வாலிபரை அரிவாளால் வெட்டியவர்களை கைது செய்யக்கோரி உறவினர் பஸ் மறியல்
ADDED : நவ 11, 2024 04:05 AM

திருவாடானை: முன்விரோத தகராறில் வாலிபரை அரிவாளால் 6 பேர் கொண்ட கும்பல் வெட்டியது. அவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் பஸ் மறியல்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாடானை அருகே குருந்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் சேதுராமன் 32. சூர்யா 30. இருவரும் வெவ்வேறு தரப்பை சேர்ந்தவர்கள். இருவருக்கும் கடந்த 8 ஆண்டுகளாக முன்விரோதம் உள்ளது.
நேற்று முன்தினம் மாலை குருந்தங்குடி டாஸ்மாக் கடை முன்பு சேதுராமன் நின்று கொண்டிருந்தார். அப்போது 6பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியதில், படுகாயமடைந்த சேதுராமன் தேவகோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.
சேதுராமன் புகாரில் குருந்தங்குடி சூர்யா 30, சக்திவேல் 40, ஊருணிக்கோட்டை அண்ணாத்துரை 23, சிவானந்தம் 42 உட்பட ஆறு பேர் மீது திருவாடானை போலீசார் வழக்கு பதிந்தனர்.
இதில் சூர்யா, அண்ணாத்துரை கைது செய்யபட்டனர். மற்றவர்களையும் உடனே கைது செய்யக்கோரி நேற்று காலை 11:00 மணிக்கு ஒரு தரப்பினர் குருந்தங்குடியில் பஸ் மறியல் போராட்டம் நடத்தினர். இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இரு நாட்களுக்குள் அனைவரும் கைது செய்யபடுவார்கள் என கூறியதை தொடர்ந்து பஸ் மறியல்போராட்டம் கைவிடபட்டது.