/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மஸ்கட்டில் சிரமப்படும் பெண் மீட்டுத்தர உறவினர் வலியுறுத்தல்
/
மஸ்கட்டில் சிரமப்படும் பெண் மீட்டுத்தர உறவினர் வலியுறுத்தல்
மஸ்கட்டில் சிரமப்படும் பெண் மீட்டுத்தர உறவினர் வலியுறுத்தல்
மஸ்கட்டில் சிரமப்படும் பெண் மீட்டுத்தர உறவினர் வலியுறுத்தல்
ADDED : டிச 10, 2024 04:54 AM
ராமநாதபுரம்: ஓமன் நாடு மஸ்கட்டில் வீட்டு வேலை செய்யும் இடத்தில் சிரமப்படும் கடலாடி அருகே புனவாசலைச் சேர்ந்த பெண்ணை மீட்டுத்தர வேண்டும் என அவரது உறவினர்கள் வலியுறுத்தினர்.
கடலாடி தாலுகா புனவாசலை சேர்ந்த நபிலா, அவரது உறவினர்களுடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
எனது தாய் பத்திரகாளி 40, ஏஜென்சி மூலம் 2023ல் வீட்டு வேலைக்கு மஸ்கட் சென்றார். தற்போது அங்கு அவரை கொடுமைப் படுத்துவதாகவும், உடல் நலக்குறைவால் சிரமப்படுவது தெரிய வந்துள்ளது.
எனவே இந்திய வெளியுறவுத்துறையை கடிதம் வழியாக ராமநாதபுரம் கலெக்டர் தொடர்பு கொண்டு எனது தாயாரை மீட்டுத்தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.