/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விலங்குகளால் சேதமடைந்த பயிருக்கு நிவாரணத் தொகை தினமலர் செய்தி எதிரொலி
/
விலங்குகளால் சேதமடைந்த பயிருக்கு நிவாரணத் தொகை தினமலர் செய்தி எதிரொலி
விலங்குகளால் சேதமடைந்த பயிருக்கு நிவாரணத் தொகை தினமலர் செய்தி எதிரொலி
விலங்குகளால் சேதமடைந்த பயிருக்கு நிவாரணத் தொகை தினமலர் செய்தி எதிரொலி
ADDED : பிப் 17, 2024 04:50 AM
பரமக்குடி: -ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் வன விலங்குகளால் சேதமடைந்த பயிர்களுக்கு தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
பரமக்குடி அருகே பல்வேறு கிராமங்களில் காட்டுப் பன்றிகள், மான் உள்ளிட்ட வன விலங்குகளால் பயிர்கள் சேதம் அடைந்தது. இதனால் விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் நஷ்டம் ஏற்பட்டதால் மன வேதனைக்கு ஆளாகினர்.
தொடர்ந்து புதுக்குடி, பெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பயிர்கள் சேதம் அடைந்தது குறித்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டு வந்தது. மேலும் விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் மாவட்ட வன அலுவலர் ஹேமலதா, வன விலங்குகளால் பயிர்கள் சேதம் அடைந்த விவசாயிகள் சுப்பையா, புதுக்குடி உமாதேவி, மலர்மங்கை, கவிதைக்குடி தியாகராஜன் ஆகியோரின் வங்கி கணக்கில் நிவாரணத் தொகை நேரடியாக வரவு வைக்கப்படும், என்றார். மேலும் வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்திற்கு வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை சான்று தேவையில்லை. வன விலங்குகளால் பயிர் சேதமடைந்த 15 நாட்களுக்குள் அருகிலுள்ள வன சரகத்தை அணுகி பொது மக்களுக்கும், விளை நிலங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை தெரிவித்தால் அதற்கான நஷ்ட ஈடு வழங்க வனத்துறை துரித நடவடிக்கை எடுக்கும். நிவாரணத்திற்கு 97864 56941, 86103 80675 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.