/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு நிவாரணம்
/
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு நிவாரணம்
ADDED : நவ 01, 2024 04:43 AM
ராமேஸ்வரம்: தினமலர் செய்தி எதிரொலியாக ராமேஸ்வரம் மீனவர்களுக்கு குறைந்த கால மீன்பிடி நிவாரணம் ரூ.6000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
மழைக்கால சீசன் அக்., முதல் டிச., வரை மீன்பிடிக்க செல்ல முடியாத காலக்கட்டத்தில் மீனவர்கள் சேமிப்பு நிதியுடன் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பை சேர்த்து ரூ.4500, மேலும் குறைந்த கால மீன்பிடிப்பு நிவாரணம் ரூ. 6000 தமிழக அரசு வழங்கும்.
இத்தொகை தீபாவளிக்கு முன்பு வழங்குவதால் பண்டிகையை மீனவர்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். ஆனால் அக்.29 வரை நிவாரணத் தொகையை தமிழக அரசு வழங்காமல் இழுத்தடித்ததால் புத்தாடை வாங்க முடியாமல் மீனவர்கள் திணறினர்.
இதுகுறித்து அக்.29ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று முன்தினம் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பனில் உள்ள 16,366 மீனவர் குடும்பத்திற்கு குறைந்த கால மீன்பிடி நிவாரணம் தலா ரூ.6000 வங்கியில் அரசு செலுத்தியது. இதையடுத்து வங்கிகளில் மீனவர்கள் காத்திருந்து பணத்தை பெற்று புத்தாடை வாங்கி மகிழ்ந்தனர்.
ஆர்ப்பாட்டம்
இருப்பினும் புயல் கால சேமிப்பு நிவாரணத் தொகையை உடனே வழங்கக் கோரி கடல் தொழிலாளர் சங்கம் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் கருணாமூர்த்தி தலைமையில் தொழிலாளர்கள் நேற்று ராமேஸ்வரம் மீன்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.