/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாலை நடுவில் இடையூறாக இருந்த மின்கம்பம் அகற்றியதால் நிம்மதி
/
சாலை நடுவில் இடையூறாக இருந்த மின்கம்பம் அகற்றியதால் நிம்மதி
சாலை நடுவில் இடையூறாக இருந்த மின்கம்பம் அகற்றியதால் நிம்மதி
சாலை நடுவில் இடையூறாக இருந்த மின்கம்பம் அகற்றியதால் நிம்மதி
ADDED : மார் 07, 2024 10:51 AM
முதுகுளத்துார்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார்-- ராமநாதபுரம்சாலையில் ராமலிங்கபுரம்ரோட்டருகே சாலையில் இடையூறாக இருந்த மின்கம்பத்தை மின்வாரிய அதிகாரிகள் அகற்றினர்.
முதுகுளத்துாரில் இருந்து காக்கூர் தேரிருவேலி, உத்திரகோசமங்கை வழியாக ராமநாதபுரம் செல்லும் முக்கிய சாலையாகும். இங்கு சாலை குறுகலாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். ஒரு சில இடங்களில் எதிரில் வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு செல்லும் போது சாலையோரத்தில் இறங்கி செல்லும் அபாயம் உள்ளது.
முதுகுளத்துார்- -ராமநாதபுரம் சாலை காக்கூர் மற்றும் தேரிருவேலி அருகே சாலை அகலப்படுத்தும் பணி நடந்தது.
ராமலிங்கபுரம் முக்கு ரோடு பஸ் ஸ்டாப் அருகே சாலையில் உள்ள மின் கம்பத்தை அகற்றாததால் சாலை அகலப்படுத்தும் பணி முழுமைபெறாமல் உள்ளது.
இரவு நேரத்தில் எதிரில் வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு செல்லும் போது மின் கம்பத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ராமலிங்கபுரம் முக்கு ரோடு அருகே சாலையில் இடையூறாக இருந்த மின்கம்பத்தை மின்வாரியத்தினர் அகற்றினர்.

