/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மொகரம் பண்டிகையை முன்னிட்டு மதநல்லிணக்க பூக்குழி விழா
/
மொகரம் பண்டிகையை முன்னிட்டு மதநல்லிணக்க பூக்குழி விழா
மொகரம் பண்டிகையை முன்னிட்டு மதநல்லிணக்க பூக்குழி விழா
மொகரம் பண்டிகையை முன்னிட்டு மதநல்லிணக்க பூக்குழி விழா
ADDED : ஜூலை 07, 2025 02:40 AM
கடலாடி : கடலாடியில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு மத நல்லிணக்க பூக்குழி உற்ஸவ விழா நடந்தது.
கடலாடியில் ரணசிங்க பட்டாணி சாமி தலைவர் நினைவிடம் உள்ளது.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரியமாக மொகரம் பண்டிகை அன்று பூக்குழி விழா நடத்தப்படுகிறது.
ஜூன் 26 அன்று நினைவிடம் அருகே கொடி ஏற்றதலுடன் விழா துவங்கியது. ஜூலை 2 மற்றும் (நேற்று முன்தினம்) ஆகிய நாட்களில் அலங்கரிக்கப்பட்ட சப்பர ஊர்வலமும் நடந்தது.
நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு நினைவிடம் அருகே பூக்குழி வளர்க்கும் நிகழ்ச்சி துவங்கியது.
நேற்று காலை 4:00 மணிக்கு நேர்த்திக்கடன் பக்தர்கள் ஏராளமானோர் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்றனர்.