/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு
/
மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு
ADDED : மார் 27, 2025 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தொண்டியில் ரம்ஜான் திருநாளை முன்னிட்டு த.மு.மு.க., சார்பில் மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி பஸ் ஸ்டாண்ட் அருகே தனியார் மகாலில் நடந்தது.
த.மு.மு.க., தொண்டி பேரூர் தலைவர் காதர் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சாதிக்பாட்ஷா வரவேற்றார். ஐக்கிய ஜமாத் தலைவர் செய்யதுஅலி, ஹிந்து பரிபாலன சபை பொறுப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், ராஜசேகர், தொண்டி துாயசிந்தாதிரை அன்னை சர்ச் பாதிரியார் லியாகுல அமிர்தராஜ் உட்பட அனைத்து மதத்தினரும் பங்கேற்றனர். உணவு வழங்கப்பட்டது. பேரூராட்சி கவுன்சிலர் பெரியசாமி நன்றி கூறினார்.