ADDED : டிச 04, 2024 04:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: கீழக்கரையில் மகான் செய்யது முகமது அப்பா தர்காவில் 850ம் ஆண்டு மத நல்லிணக்க கந்துாரி விழா நடந்தது. நவ.3ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நவ.16ல் புனித மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று மாலை 6:00 மணிக்கு தர்கா முன்புறம் உள்ள வளாகத்தில் கொடி இறக்கம் நடந்தது. உலக நன்மைக்காக சிறப்பு துவா ஓதப்பட்டது.
ஏராளமானோர் பங்கேற்றனர். நெய் சோறு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மகான் செய்யது முகமது அப்பா ஒலியுல்லா தர்கா விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.