ADDED : பிப் 06, 2024 11:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் ராமநாதபுரம் வடக்கு மாவட்டம், தொண்டி வெள்ளை மணல் கிளை சார்பில் 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்,' என்ற தலைப்பில் நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி தொண்டி தனியார் திருமண மகாலில் நடந்தது.
மாவட்ட தலைவர் புதுவலசை ரகுமான்அலி தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் அப்துல் கரீம் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அமைதிக்கு என்ன வழி, உண்மையான பகுத்தறிவு எது போன்ற பல்வேறு சமூக நல்லிணக்க கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது.

