/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஏர்வாடி தர்காவில் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா கோலாகலம் * நாளை உள்ளூர் விடுமுறை
/
ஏர்வாடி தர்காவில் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா கோலாகலம் * நாளை உள்ளூர் விடுமுறை
ஏர்வாடி தர்காவில் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா கோலாகலம் * நாளை உள்ளூர் விடுமுறை
ஏர்வாடி தர்காவில் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா கோலாகலம் * நாளை உள்ளூர் விடுமுறை
ADDED : மே 21, 2025 03:07 AM
கீழக்கரை:ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு அப்பகுதி முழுவதும் விழா கோலம் பூண்டுள்ளது. நாளை (மே 22) சந்தனக்கூடு ஊர்வலம் நடக்கிறது.
ஏர்வாடியில் அல்குத் புல் சுல்தான் செய்யது இப்ராஹிம் பாதுஷா நாயகம் தர்கா உள்ளது. இங்கு மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா ஏப்., 29 விழா துவங்கியது. மே 9 கொடியேற்றம் நடந்தது. முதல் தரம் வாய்ந்த சந்தன கட்டைகளை வாங்கி பன்னீரில் ஊறவைத்து அவற்றை கற்களில் வைத்து தோய்த்தெடுக்கப்பட்டு சேகரிக்கப்பட்டுள்ளது. சந்தனக்கூடு விழா இன்று (மே 21) மாலை முதல் தொடர்ந்து இரவு முழுவதும் நடக்கிறது. இஸ்லாமிய மார்க்க அறிஞர்களால் மவுலீது எனப்படும் புகழ் மாலை உலக நன்மைக்காக தொடர்ந்து ஓதப்படுகிறது.
நாளை ( மே 22) 50 அடி உயரம் கொண்ட மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ரதம் ஏர்வாடி தைக்காவிலிருந்து அதிகாலை 5:00 மணிக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட சந்தன குடங்களில் இருந்து புனித மக்பராவிற்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடக்கிறது. பின் வண்ண போர்வைகள் போர்த்தப்பட்டு மல்லிகை சரங்களால் அலங்கரிக்கப்படுகிறது.
விழாவை முன்னிட்டு தர்கா மற்றும் அதனை சுற்றியுள்ள வளாகப் பகுதிகள் முழுவதும் கண்ணை கவரும் மின்னொளியால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. நாளை (மே 22) வியாழக்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விழா முன்னேற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் சிம்ரன்ஜித் சிங் காலோன், எஸ்பி., சந்தீஷ் ஆய்வு செய்தனர். விழாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநில, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து யாத்திரியர்கள் குவிகின்றனர். விழா ஏற்பாடுகளை ஏர்வாடி தர்கா ஹத்தார் நிர்வாக சபையினர் செய்துள்ளனர்.