/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நயினார்கோவில் ரோட்டில் காய்ந்த புளியமரம் அகற்றம்
/
நயினார்கோவில் ரோட்டில் காய்ந்த புளியமரம் அகற்றம்
ADDED : ஜன 13, 2025 06:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம்- நயினார்கோவில் ரோட்டோரம் இருந்த ஆபத்தான பட்டுப்போன புளிய மரம் அகற்றப்பட்டது.
எமனேஸ்வரம் வண்டியூர் பகுதியில் போலீஸ் ஸ்டேஷன் அருகில் பட்டுப்போன புளியமரம் ரோட்டோரம் இருந்தது. நெசவாளர்கள் குடியிருப்பு பகுதியாக இருந்ததால் தறியின் மீது விழுந்து ஆபத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று காலை நெடுஞ்சாலைத்துறையினர் மரம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தினமலர் நாளிதழுக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.