/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் ரயில் பாலத்தில் உடைந்த கிரேன் அகற்றம்
/
பாம்பன் ரயில் பாலத்தில் உடைந்த கிரேன் அகற்றம்
ADDED : பிப் 03, 2024 01:34 AM

ராமேஸ்வரம்:-ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலத்தில் உடைந்த கிரேன் இரும்பு கம்பியை ரயில்வே ஒப்பந்த ஊழியர்கள் அகற்றினர்.
பாம்பன் கடலில் ரூ.525 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணி நடக்கிறது. இக்கடலில் கப்பல், படகுகள் கடந்து செல்ல வசதியாக பாலம் நடுவில் லிப்ட் வடிவில் துாக்கு பாலம் பொருத்த உள்ளனர்.
நேற்று முன்தினம் துாக்கு பாலத்திற்கு துாண்கள் பொருத்த நாட்டுப்படகில் கொண்டு வரப்பட்ட சதுர வடிவ இரும்பு உருளையை பாலத்தில் இருந்த கிரேன் மூலம் துாக்கிய போது கிரேன் இரும்பு கம்பி உடைந்து விழுந்ததில் இருவர் காயமடைந்தனர்.
இதன் தொடர்ச்சியாக பணியில் இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று பாலம் நடுவில் மற்றொரு கிரேன் கொண்டு வரப்பட்டு உடைந்த இரும்பு கம்பியை அகற்றினர். இதன்பின் துாக்கு பாலத்திற்கு துாண்கள் பொருத்தும் பணியை ரயில்வே ஒப்பந்த ஊழியர்கள் மீண்டும் துவக்கினர்.

