/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
சாயல்குடியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
/
சாயல்குடியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
PUBLISHED ON : நவ 23, 2025 04:33 AM
சாயல்குடி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முன்பு போக்குவரத்திற்கு இடையூறாக தள்ளுவண்டி கடைகள் இருந்தன.
நாள்தோறும் சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில் கடைகள் மற்றும் டூவீலர்களை அதிகளவில் அப்பகுதியில் நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரகால வாகனங்கள் செல்லும் போது தொடர் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணி நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் திருப்பதி கூறியதாவது: பொதுமக்களுக்கு இடையூறாக சாலை ஓரங்களில் ஆக்கிரமிப்பு கடைகள் வைப்பது தவறான முன்னுதாரணம். எனவே பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டுள்ளது என்றார்.

