/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் ரயில் பாலத்தில் இரும்பு உருளை அகற்றம்
/
பாம்பன் ரயில் பாலத்தில் இரும்பு உருளை அகற்றம்
ADDED : அக் 29, 2024 11:20 PM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் துாக்கு பாலத்தின் கீழ் கடலுக்குள் பொருத்திய இரும்பு உருளையை ராட்சத மிதவை கிரேன் மூலம் ரயில்வே ஊழியர்கள் அகற்றினர்.
பாம்பன் கடலில் 550 கோடி ரூபாயில் புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணிகள் முடிந்தது.
இதன் நடுவில் 650 டன் துாக்கு பாலம் பொருத்துவதற்காக 3 மாதங்களுக்கு முன் கடலில் 18 இரும்பு உருளைகளை ஊன்றினர். துாக்கு பாலத்தை இந்த உருளைகள் மீது வைத்த பின், பாலத்துடன் இணைத்து துாக்கு பாலத்தை பொருத்தினர்.
புதிய பாலத்தில் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், நவ., 20க்குள் பாலத்தை திறக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் துாக்கு பாலத்தை திறந்ததும் படகுகள், கப்பல்கள் கடந்து செல்ல ஏதுவாக, ஏற்கனவே கடலில் ஊன்றிய இரும்பு உருளைகளை நேற்று ராட்சத மிதவை கிரேன் மூலம் ரயில்வே ஊழியர்கள் அகற்றினர்.
இதற்காக காலை முதல் இரவு 7:00 மணி வரை துாக்கு பாலத்தை 17 மீ., உயரத்தில் திறந்தபடி வைத்திருந்தனர். நவ., 5க்குள் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் பாம்பன் பாலத்தை ஆய்வு செய்ய உள்ளார்.
இதன் பின் பாலம் திறப்பு விழா பணிகள் நடக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.