/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முன் அறிவிப்பின்றி ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்கம்
/
முன் அறிவிப்பின்றி ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்கம்
முன் அறிவிப்பின்றி ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்கம்
முன் அறிவிப்பின்றி ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்கம்
ADDED : ஜூலை 17, 2025 11:21 PM
பரமக்குடி: பரமக்குடியில் ரேஷன் கார்டுகளில் உள்ளவர்களின் பெயர்களை முன்னறிவிப்பின்றி நீக்குவது குறித்து இந்திய கம்யூ., கட்சியினர் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனு அளித்தனர்.
ரேஷன் கார்டுகளில் உள்ள அனைவரின் பெயர்களும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குடும்ப கார்டில் பெயர் உள்ளவர்கள் ரேஷன் கடைகளில் சென்று ரேகை வைத்து தங்களை புதுப்பிக்க தெரிவிக்கின்றனர்.
ரேஷன் கடைகளுக்கு செல்லாதவர்களின் பெயர்கள் முன்னறிவிப்பின்றி நீக்கப்பட்டு வருகிறது. இதனால் கடைகளில் சீனி, அரிசி உள்ளிட்டவற்றின் எடை குறைத்து வழங்கப்படும் நிலை உள்ளது.
தற்போது பெயர் நீக்கம் போன்ற செயல்களால் சாமானிய மக்களின் கைக்கு எட்டாத துாரத்தில் ரேஷன் கடை செல்கிறது.
ஆகவே அரசு முன்னறிவிப்பின்றி பெயர் நீக்குவதை விடுத்து சரி செய்ய வேண்டும். மேலும் ஜீவா நகரில் உள்ள ராம்கோ கடை 5ல் 1800 குடும்ப அட்டைகள் உள்ளன. இதனை இரண்டாக பிரிக்க வேண்டும். இது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் பெருமாள் உட்பட நிர்வாகிகள் ராஜன், சுப்பிரமணியன், பாஸ்கரன் உள்ளிட்டோர் மனு அளித்துள்ளனர்.