/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உத்தரகோசமங்கை கோயிலில் தேங்கிய மழைநீர் அகற்றம்
/
உத்தரகோசமங்கை கோயிலில் தேங்கிய மழைநீர் அகற்றம்
ADDED : நவ 22, 2024 04:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்கள நாயகி கோயிலில் புகுந்த மழைவெள்ளம் வெளியேற்றப்பட்டது.
பலத்த மழையால் உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. பிரகார மண்டபத்தில் மழை நீர் தேங்கியது.
இதையடுத்து நேற்று அதிகாலை முதல் பிரகார மண்டபத்தில் தேங்கியிருந்த மழை நீரை மின் மோட்டார் மூலம் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு துாய்மைப் பணி நடந்தது. அக்னி தீர்த்த தெப்பக்குளத்தில் மழைநீர் விடப்பட்டது.
சமீபத்தில் துார்வாரப்பட்ட அக்னி தீர்த்த தெப்பக்குளம் தற்போது பெய்த மழையால் நிரம்பி வருகிறது.