ADDED : மார் 25, 2025 05:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை- திருவெற்றியூர் செல்லும் ரோட்டில் சில இடங்களில் மணல் மூடுவதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதால் மணல் அகற்றப்பட்டது. திருவாடானை-திருவெற்றியூர் ரோட்டில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
அரும்பூர், குளத்துார் உள்ளிட்ட சில இடங்களில் கண்மாய்கரை ஓரமுள்ள மணல் ரோட்டை மூடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். பலத்த காற்று வீசுவதால் கண்மாய் ஓரங்களிலிருந்து மணல் ரோட்டை மூடுகிறது.
இதனால் டூவீலர்களில் செல்பவர்கள் சறுக்கி விழுந்து காயமடைந்தனர்.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக திருவாடானை நெடுஞ்சாலைத்துறையினர் சென்று ரோட்டை மூடிய மணலை அகற்றினர்.