/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கமுதி - -முதுகுளத்துார் ரோடு சீரமைப்பு
/
கமுதி - -முதுகுளத்துார் ரோடு சீரமைப்பு
ADDED : ஜன 05, 2025 11:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி; மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் கமுதி - -முதுகுளத்துார் ரோடு பேரையூர் அருகே சேதமடைந்துள்ள ரோடு சீரமைக்கும் பணி நடக்கிறது.
கமுதி -- -முதுகுளத்துார் ரோடு பேரையூர், கருங்குளம் கிராமத்தின் அருகே ரோடு ஆங்காங்கே சேதமடைந்து குண்டும் குழியுமாக இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
இதுகுறித்து தினமலர் நாளிதழிலும் செய்தி வெளியானது. இதையடுத்து சேதமடைந்த ரோடு சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வந்தது.
புதிதாக தார்ரோடு அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் முருகன்  ஆய்வு செய்தார். கமுதி உதவி கோட்ட பொறியாளர் சக்திவேல் உடனிருந்தார்.

