/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொண்டி தெருக்களில் மறுசீரமைப்பு பணிகள்
/
தொண்டி தெருக்களில் மறுசீரமைப்பு பணிகள்
ADDED : டிச 22, 2024 08:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி : தொண்டியில் ஜல்ஜீவன் திட்டத்தில் வீட்டுக்கு வீடு இணைப்பு கொடுக்கும் பணிகள் நடக்கிறது.
இதற்காக தெருக்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். இதையடுத்து மறு சீரமைப்பு பணிகள் நடக்கிறது. பேரூராட்சி தலைவர் ஷாஜகான்பானு கூறுகையில், குடிநீர் இணைப்பு வழங்கப்பட்ட தெருக்களில் தோண்டப்பட்ட இடங்களில் மறு சீரமைப்பு பணிகள் நடக்கிறது. விரைவில் பணிகள் முடிவடையும் என்றார்.