/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாடகை தராத கல்லுாரி விடுதி; பூட்டு போட உரிமையாளர் முடிவு
/
வாடகை தராத கல்லுாரி விடுதி; பூட்டு போட உரிமையாளர் முடிவு
வாடகை தராத கல்லுாரி விடுதி; பூட்டு போட உரிமையாளர் முடிவு
வாடகை தராத கல்லுாரி விடுதி; பூட்டு போட உரிமையாளர் முடிவு
ADDED : ஜன 07, 2025 12:35 AM
சாயல்குடி; ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில், அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கல்லுாரி மாணவியர் விடுதிக்கு வாடகை தராததால், கட்டடத்திற்கு பூட்டு போடவுள்ளதாக அதன் உரிமையாளர் புஷ்பவள்ளி தெரிவித்தார்.
சாயல்குடியில், புஷ்பவள்ளிக்கு சொந்தமான மூன்று மாடி கட்டடத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கல்லுாரி மாணவியர் விடுதி செயல்படுகிறது. மாத வாடகை 40,000 ரூபாயில் 2022 ஜூலை முதல் இயங்குகிறது.
இக்கட்டட வாடகையை இதுவரை வழங்கவில்லை. விடுதி காப்பாளர் காளியம்மாள், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர்களிடம் புஷ்பவள்ளி தொடர்ந்து பலமுறை முறையிட்டும், உரிய ஆவணங்களை சமர்ப்பித்தும், இரண்டரை ஆண்டுகளாக வாடகை வழங்கவில்லை.
புஷ்பவள்ளி கூறுகையில், ''கணவரை இழந்து உடல்நலக்குறைவுடன் இருக்கும் நிலையில், வாடகை தராததால் விடுதியை பூட்ட முடிவு செய்துள்ளேன்,'' என்றார்.