/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பிரதான கால்வாய் ஷட்டர்கள் பழுது; சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு
/
பிரதான கால்வாய் ஷட்டர்கள் பழுது; சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு
பிரதான கால்வாய் ஷட்டர்கள் பழுது; சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு
பிரதான கால்வாய் ஷட்டர்கள் பழுது; சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு
ADDED : ஜூலை 01, 2024 06:19 AM

பரமக்குடி : பரமக்குடி பகுதியில் வைகை ஆறு வலது, இடது பிரதான கால்வாய் ஷட்டர் பகுதிகளில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் தேவையுள்ள இடங்களுக்கு தண்ணீரை கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. சீமைக்கருவேல மரங்களை அகற்றி ஷட்டர் பழுதை சரிசெய்ய, விவசாயிகள் வலியுறுத்தினர்.
தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் ராமநாதபுரம் மாவட்ட எல்லையான பார்த்திபனுார் மதகு அணையை அடைகிறது. இங்கிருந்து பல கிராமங்களுக்கு வலது, இடது பிரதான கால்வாய்கள் வழியாக தண்ணீர் பிரித்து கொடுக்கப்படுகிறது. இதன் வழியாக நுாற்றுக்கும் மேற்பட்ட கண்மாய்கள் பயனடைவதால் பல லட்சம் ஏக்கரில் விவசாயம் நடக்கிறது. தொடர்ந்து மதகு அணை அமைக்கப்பட்டு 40 ஆண்டுகள் கடந்த நிலையில் பல பகுதிகள் பராமரிப்பின்றி உள்ளன.
குறிப்பாக வைகை ஆறு மற்றும் அதன் கிளை பகுதிகளில் ஏராளமான ஷட்டர்கள் உள்ளன. இவை பராமரிப்பின்றி பழுதடைந்த நிலையில் இதன் கரைகளில் ஏராளமான சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து ஷட்டர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இதனால் ஒவ்வொரு முறை வைகையில் தண்ணீர் வரும் போதும் ஷட்டர்கள் பாதிப்பால் தேவையான பகுதிகளுக்கு தண்ணீரை கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே கருவேல மரங்களை அகற்றி ஷட்டர்களை பழுதுநீக்கி பாதுகாக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
---