முதுகுளத்துார்: முதுகுளத்துார் தாலுகா அலுவலகம் அருகே முன்னாள் ராணுவ வீரர்கள் அலுவலகம் முன்பு தலைவர் கண்ணன் தலைமையில் கேப்டன் செந்துார்பாண்டியன் தேசியக் கொடி ஏற்றினார்.
பஸ் ஸ்டாண்டில் இருந்து முக்கிய வீதிகளில் முன்னாள் ராணுவ வீரர்கள் தேசியக்கொடி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். உடன் செயலாளர் வேலு, பொருளாளர் துரைச்சாமி உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முதுகுளத்துார் கடலாடி விலக்கு ரோடு அருகே உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் முன்னாள் ஆசிரியர் துரைபாண்டியன் தேசியக் கொடி ஏற்றினார். சேதுசீமை பட்டாளம் சார்பில் இனிப்புகள் வழங்கி நன்கொடை வழங்கப்பட்டது. உடன் சேதுசீமை பட்டாளம் வீரர்கள் கலந்து கொண்டனர்.
* நயினார் கோவில் ஒன்றியம் அ.பனையூரில் உள்ள சண்முகநாதன் தொடக்கப்பள்ளியில் குடியரசு தினவிழா நடந்தது. பள்ளி நிர்வாகி கண்ணன் தேசியக்கொடியேற்றினார். மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது. தலைமை யாசிரியர் ராஜேஸ்வரி, உதவி ஆசிரியர் மஞ்சுளா, முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

