தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ குடியரசு தின விழா கொண்டாட்டம்

 குடியரசு தின விழா கொண்டாட்டம்

 குடியரசு தின விழா கொண்டாட்டம்


ADDED : ஜன 28, 2026 05:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2026 05:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த குடியரசு தின விழா கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்குகலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் கேடயம் வழங்கி பாராட்டினார். எஸ்.பி., சந்தீஷ், முதன்கல்வி அலுவலர் ரெஜினி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

ராமநாதபுரம் முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கம் அலுவலகத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. பொறுப்பாளர் முருகானந்தம் தலைமை வகித்தார்.ரமேஷ்பாபு தேசியக்கொடி ஏற்றினார். பொருளாளர் பூமிநாதன், உப தலைவர் லோகேஸ்வரன், நிர்வாகிகள் நாகரத்தினம், அருள்பிரகாசம், சந்திரன், முன்னாள் வீரர்கள் பங்கேற்றனர். ராமநாதபுரம் சேதுபதி நகர் வடக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்போர் நலசங்கம் சார்பில் குடியரசு தின விழாவை முன்னிட்டு தேசியக்கொடியேற்றினர். துாய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினர். இனிப்புகள் வழங்கப்பட்டது. சங்க தலைவர் கணபதி காந்தம், செயலாளர் மணிமாறன், பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.எஸ்.ஐ., சுபாஷ் சந்திரபோஸ், குடியிருப்போர் பங்கேற்றனர்.

* பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதி பாலமுருகன் தேசியக்கொடி ஏற்றினார். சார்பு நீதிபதி அறிவு முன்னிலை வகித்தார். வக்கீல் சங்க தலைவர் பூமிநாதன் வரவேற்றார். செயலாளர் யுவராஜ் மற்றும் வக்கீல்கள் பங்கேற்றனர்.

*பரமக்குடி சோமநாதபுரம் சவுராஷ்டிரா தேசிய நடுநிலைப் பள்ளியில் கல்விக் கழக தலைவர் ராமையன் தலைமை வகித்தார். நிர்வாகி சங்கர் முன்னிலை வகித்தார். தாளாளர் குப்புசாமி வரவேற்றார். பள்ளி ஆசிரியர் காயத்ரி தேசியக் கொடி ஏற்றினார். கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

ஆசிரியர் விமல்ராஜ் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us