/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புரட்டாசியில் திருப்புல்லாணிக்கு கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
/
புரட்டாசியில் திருப்புல்லாணிக்கு கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
புரட்டாசியில் திருப்புல்லாணிக்கு கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
புரட்டாசியில் திருப்புல்லாணிக்கு கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
ADDED : செப் 23, 2024 05:16 AM
திருப்புல்லாணி : திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலுக்கு செல்ல வசதியாக புரட்டாசியில் கூடுதல் பஸ்கள் இயக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்
ஆதி ஜெகநாதப் பெருமாள் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள், யாத்ரீகர்கள் வருகின்றனர்.
குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமை, விசேஷ தினங்களில் பெருமாளை தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் வெளியூர்களில் இருந்தும் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் வருகின்றனர்.
இவர்கள் பஸ் ஸ்டாண்டில் நீண்ட நேரம் காத்திருந்து கூட்டத்தில் பயணம் செய்கின்றனர்.
பெரும்பாலானோர் வாடகை வாகனங்களில் கூடுதல் கட்டணம் கொடுத்து வருகின்றனர். எனவே பக்தர்களின் நலன் கருதி கூடுதல் எண்ணிக்கையில் புரட்டாசி மாதத்தில் பஸ்களை இயக்கினால் பயனுள்ளதாக இருக்கும் என யாத்ரீகர்கள் கோரிக்கை விடுத்தனர்.