/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஏர்வாடியில் புதிய தார் ரோடு அமைப்பதற்கு கோரிக்கை
/
ஏர்வாடியில் புதிய தார் ரோடு அமைப்பதற்கு கோரிக்கை
ADDED : நவ 21, 2024 04:28 AM

ராமநாதபுரம்: ஏர்வாடியில் ஊருக்குள் செல்லும் பிரதான ரோட்டில் புதிதாக தார் ரோடு அமைக்கும் பணி விபரம் குறித்த அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். கழிவு நீர் வடிகாலில் செல்லும் வகையில் ரோடு அமைக்க மக்கள் வலியுறுத்தினர்.
ஏர்வாடியை சேர்ந்த அம்ஜத் உசேன் தலைமையில் அப்பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில் ஏர்வாடியில் ஊருக்குள் செல்லும் பிரதான சாலையில் ஒரு அடி உயரத்தில் புதிதாக தார் ரோடு அமைக்கும் பணி நடக்கிறது.
இதனால் சிறிய தெருக்களில் மழை நீர், கழிவு நீர் வாய்க்காலில் செல்ல முடியாமல் தேங்குகிறது. சுகாதாரக்கேட்டால் மக்கள்சிரமப்படுகின்றனர்.
இது தொடர்பாக கடலாடி ஊராட்சி ஒன்றியம், ஏர்வாடி ஊராட்சியில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
எனவே புதிதாக தார் ரோடு அமைக்கும் பணி விபரம் குறித்து அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். சிறிய தெருக்களில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படாத வகையில் தண்ணீர் செல்வதற்கு வழி செய்து சாலை அமைக்க கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.