தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ திருவாடானையில் ஆர்.டி.ஓ., அலுவலகம் அமைக்க கோரிக்கை

 திருவாடானையில் ஆர்.டி.ஓ., அலுவலகம் அமைக்க கோரிக்கை

 திருவாடானையில் ஆர்.டி.ஓ., அலுவலகம் அமைக்க கோரிக்கை


ADDED : செப் 14, 2026 11:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2026 11:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவாடானை: திருவாடானை தாலுகா மக்கள் பல்வேறு சான்றிதழ்களுக்காக ராமநாதபுரத்திற்கு அலைய வேண்டியிருப்பதால், திருவாடானையில் ஆர்.டி.ஓ., அலுவலகம் அமைக்க வலியுறுத்தபட்டுள்ளது.

திருவாடானை தாலுகா மக்கள் தங்களின் அன்றாடத் தேவைகளுக்காகவும், அரசுச் சான்றிதழ்களுக்காகவும் மாவட்டத் தலைநகரையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. குறிப்பாக ​பிறப்பு, இறப்பு சான்றிதழ், தாமதமான பதிவுகளை மேற்கொள்ள ஆர்.டி.ஓ., அனுமதி அவசியம். இதற்கு திருவாடானையிலிருந்து ராமநாதபுரம் செல்வதற்கே ஒரு நாள் முழுவதும் செலவாகிறது. கூலி வேலைக்குச் செல்லும் மக்கள், செலவு செய்து நீண்ட நேரம் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ​​ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மக்களின் மனுக்கள் குவிந்து கிடப்பதால், திருவாடானை மக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஆகிறது.

இது குறித்து திருவாடானை மக்கள் கூறியதாவது- ஒரு இறப்புச் சான்றிதழ் வாங்கிறதுக்குள்ள பெரும் அலைச்சலாக உள்ளது. திருவாடானை, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளை இணைத்து திருவாடானையை தலைமையிடமாக கொண்டு புதிய ஆர்.டி.ஓ. அலுவலகம் உருவாக்க வேண்டும். ​மக்களின் அலைச்சலைத் தவிர்க்கவும், விரைவான நிர்வாக சேவை கிடைக்கவும் திருவாடானையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us