/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் நெடுஞ்சாலையோரங்களில் சாய்ந்து கிடக்கும் வழிகாட்டி பலகைகள் சீரமைக்க கோரிக்கை

ADDED : அக் 23, 2024 04:14 AM
பரமக்குடி : பரமக்குடி- ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையோரம் சாய்ந்து கிடக்கும் வழிகாட்டி பலகைகளை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து ராமநாதபுரம் செல்வதற்கு இருவழிச் சாலை வசதி உள்ளது. இதன்படி ரோட்டோரங்களில் வளைவுகளை அறிந்து கொள்வதற்கும், குறுக்கு ரோடுகள் குறித்து தெரிவதற்கும் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து ரோட்டோரங்களில் சீமைக்கருவேல மரங்களை எரிக்கும் போது இது போன்ற வழிகாட்டி பலகைகள் சேதமடைகிறது. தற்போது நெடுஞ்சாலை ஓரங்களில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடக்கிறது.
அப்போது மண் அள்ளும் இயந்திரத்தால் பள்ளம் தோண்டும் பணிகள் மேற்கொள்ளும் போது இடையில் வரும் வழிகாட்டி பலகைகள் உட்பட ஊர் பெயர்களின் பலகைகளும் சாய்ந்து விடுகின்றன. இவற்றை சீரமைக்க வேண்டிய துறையினர் அப்படியே விட்டு செல்வதால் அதிவேகத்தில் நெடுஞ்சாலையில் வரும் வாகன ஓட்டிகள் வழிகாட்டி பலகைகள் இல்லாமல் விபத்திற்குள்ளாகும் நிலை அதிகரித்துள்ளது.
எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ரோட்டோரங்களில் உள்ள வழிகாட்டி பலகைகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.