/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பட்டுப்போகும் மரக்கன்றுகள் பராமரிப்பதற்கு கோரிக்கை
/
பட்டுப்போகும் மரக்கன்றுகள் பராமரிப்பதற்கு கோரிக்கை
பட்டுப்போகும் மரக்கன்றுகள் பராமரிப்பதற்கு கோரிக்கை
பட்டுப்போகும் மரக்கன்றுகள் பராமரிப்பதற்கு கோரிக்கை
ADDED : ஜூலை 13, 2025 11:02 PM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் - கமுதி ரோடு சித்திரக்குடி அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ள நிலையில் அவை பட்டுப்போய் வீணாவதால் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
முதுகுளத்துார் -- கமுதி ரோடு சித்திரங்குடி, கீழக்காஞ்சிரங்குளம் ரோட்டோரத்தில் கடந்த ஆண்டு நெடுஞ்சாலைத்துறை சார்பில் 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு வைத்து வலை அமைத்து பராமரிக்கப்பட்டு வந்தது.
பின் முறையாக பராமரிக்கப்படாததால் ஏராளமான மரக்கன்றுகள் பட்டுப்போய் வீணாகியுள்ளது.
மரக்கன்றுகள் வைக்கப்பட்ட இடம் தெரியாமல் மணல் மூடியுள்ளது. இதனால் அரசின் நிதி வீணடிக்கப்படுகிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து ரோட்டோரத்தில் வைக்கப்பட்டுள்ள மரக்கன்றுகளை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.