/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உர விலை பட்டியல் அறிவிக்க கோரிக்கை
/
உர விலை பட்டியல் அறிவிக்க கோரிக்கை
ADDED : அக் 18, 2025 03:45 AM
திருவாடானை: உரம் இருப்பு, விலை பட்டியலை அறிவிக்க வேண்டும் என விவ சாயிகள் வலியுறுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சிய மான திருவாடானை தாலுகாவில் 26,650 எக்டேரில் நெல் சாகுபடி நடக்கிறது. வட கிழக்கு பருவமழையை நம்பி விவசாயிகள் பணி செய்கின்றனர். தற்போது பயிர்கள் முளைத்து வருகின்றன.
இந்நிலையில் உர மிடும் பணிகள் துவங்க இருப்பதால் உரம் இருப்பு மற்றும் விலை பட்டியலை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என வலி யுறுத்தப்பட்டுள்ளது.
திருவாடானை விவ சாயிகள் கூறியதாவது:
ஆண்டு தோறும் உரம் தட்டுப்பாடு வழக்கமாக உள்ளது. கூட்டுறவு சங்கங்களை அணுகும் போது அங்கு விவசாயிகள் கேட்கும் உரம் தேவைக்கு ஏற்ப கிடைப்பதில்லை. எனவே உரங்கள் போதுமான அளவு இருப்பு வைக்க வேண்டும்.
தனியார் நிறுவனங்களில் அதிக விலை விற்பனையை தடுக்கும் வகையில் உரம் இருப்பு, விலை பட்டியலை உடனடியாக அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என்றனர்.