/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதலாக டாக்டர், செவிலியர் நியமிக்க கோரிக்கை

ADDED : ஜூலை 15, 2025 03:23 AM

ராமநாதபுரம்: கீழக்கரை தாலுகா வேளானுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதலாக டாக்டர்கள், செவிலியர்கள் நியமிக்க கோரி மேலமடை கிராம மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
வேளானுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அந்த ஊர் மட்டுமின்றி மேலமடை, நத்தம், வைகை, புல்லந்தை, சுமைதாங்கி உட்பட 20 கிராம மக்கள் சிகிச்சை பெறுகின்றனர். இங்கு இரவு நேரத்தில் டாக்டர் வருவது இல்லை. செவிலியர்களும் பற்றாக்குறையாக உள்ளது. பணிபுரியும் ஒரு டாக்டரும் விடுமுறையில் சென்று விட்டால் அவசர சிகிச்சை பெற முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே வேளானுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதலாக டாக்டர்கள், செவிலியர்கள் நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.