/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தீர்த்தாண்டதானம் கடற்கரையில் படித்துறை கட்ட கோரிக்கை
/
தீர்த்தாண்டதானம் கடற்கரையில் படித்துறை கட்ட கோரிக்கை
தீர்த்தாண்டதானம் கடற்கரையில் படித்துறை கட்ட கோரிக்கை
தீர்த்தாண்டதானம் கடற்கரையில் படித்துறை கட்ட கோரிக்கை
ADDED : ஜூலை 08, 2025 10:35 PM
தொண்டி; தீர்த்தாண்டதானம் கடற்கரையில் பக்தர்கள் நீராடும் வகையில் படித்துறை கட்ட வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொண்டி அருகே தீர்த்தாண்டதானத்தில் சகலதீர்த்தமுடையவர் கோயில் உள்ளது. சீதையை மீட்கும் பொருட்டு ராமபிரான் இவ்வழியே சென்ற போது இங்கு இளைப்பாறினார். அவருக்கு தாகம் ஏற்படவே அகத்தியர் தீர்த்தம் உண்டாக்கி கொடுத்ததாக வரலாறு உள்ளது.
அமாவாசை நாட்களில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு திதி, பித்ருக்களுக்கு தர்ப்பணம் உள்ளிட்ட சங்கல்ப பூஜைகளை செய்துவிட்டு அங்குள்ள கடலில் நீராடி, சுவாமி தரிசனம் செய்வார்கள். கடற்கரையில் படித்துறை இல்லாததால் பக்தர்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர்.
இது குறித்து மருங்கூர் ராஜன் கூறியதாவது: ராமரால் பூஜிக்கப்பட்ட தலமாக இருப்பதால் புனித தலமாக கருதப்படுகிறது. இங்கு அமாவாசை நாட்களில் முன்னோருக்கு திதி செய்வது சிறந்தது. ஆடி மற்றும் தை மாத அமாவாசை நாட்களில் வெளியூர்களிலிருந்து ஏராளமானோர் கூடுவார்கள். கடலில் புனித நீராடுவதற்கு அடிப்படை வசதியில்லாததால் சிரமம் அடைகின்றனர்.
கடற்கரை சுத்தம் இல்லாமல் இருப்பதால் பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர். பக்தர்கள் நீராடும் வகையில் படித்துறை கட்டவும், கடலில் குளித்து விட்டு வரும் பக்தர்களுக்கு உடைமாற்றும் அறை கட்டவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.