/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலாடி அருகே மலட்டாறு பெயரை மாற்ற கோரிக்கை
/
கடலாடி அருகே மலட்டாறு பெயரை மாற்ற கோரிக்கை
ADDED : அக் 15, 2025 12:51 AM
கடலாடி ; கடலாடி அருகே உள்ள மலட்டாறு எனும் சொல் வழக்கை ஆவணங்களில் உள்ளவாறு பசும்பொன்னார் நகர் என மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பசும்பொன்னார் நகரை சேர்ந்த தன்னார்வலர் குருசாமி கூறியதாவது:
1988ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பசும்பொன்னார் நகர் பெரியகுளம் ஊராட்சிக்கு உட்பட்டது. இங்கு 1000 பேருக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இங்குள்ள வீட்டு வரி ரசீது, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பத்திரத்தின் ஆவணங்கள், மின் இணைப்பு உள்ளிட்ட அனைத்திலும் பசும்பொன்னார் நகர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. நீண்ட காலமாக மலட்டாறு என்னும் சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ராமநாதபுரத்தில் இருந்து கடலாடி விலக்கு, சாயல்குடி விலக்கு உள்ளிட்ட மூன்று பிரதான வழித்தடங்களை உள்ளடக்கிய பகுதியாக பசும்பொன்னார் நகர் உள்ளது. இங்கு ஏராளமான வணிக வளாகங்கள், கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்டவைகள் உள்ளன. மலட்டாறு பஸ் ஸ்டாப் என்ற சொல் வழக்கில் இருந்து ஆவணத்தில் உள்ள பிரகாரம் பசும்பொன்னார் நகர் என பெயர் சூட்ட வேண்டும்.
இது குறித்து தொகுதி அமைச்சர், நெடுஞ்சாலை துறை அமைச்சர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு தகுந்த ஆவணங்களுடன் கோரிக்கை மனு அனுப்பி உள்ளேன் என்றார்.