/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஜல்ஜீவன் திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை
/
ஜல்ஜீவன் திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை
ADDED : ஆக 09, 2025 03:14 AM
கீழக்கரை: கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி ஊராட்சி அளவாய்க்கரைவாடியில் வீடுகள் தோறும் ஜல்ஜீவன் திட்டத்திற்காக குழாய்கள் பதித்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இதுவரை அப்பகுதியில் தண்ணீர் வினியோகம் செய்யாமல் காட்சி பொருளாக உள்ளது.
மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்திற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தோண்டப்பட்ட புதிய கிணறுகளில் இருந்து தண்ணீர் சப்ளை செய்யாமல் அப்படியே உள்ளது.
எனவே காஞ்சிரங்குடி ஊராட்சி நிர்வாகத்தினர் முறையாக அளவாய்கரைவாடி, செங்கழுநீரோடை உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கும் போக்கு அதிகரித்து வருகிறது என கிராம மக்கள் தெரிவித்தனர்.