தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ரேஷனில் கருப்பட்டி வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்த கோரிக்கை

 ரேஷனில் கருப்பட்டி வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்த கோரிக்கை

 ரேஷனில் கருப்பட்டி வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்த கோரிக்கை


ADDED : ஜன 15, 2026 07:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 15, 2026 07:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: பனைத்தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, ரேஷன் கடைகளில் கருப்பட்டி விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது. நடப்பாண்டில் அதை அமல்படுத்த வேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.

தமிழகத்தில் மாநில மரமான பனை மரங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தின் அடையாளமாக உள்ளது. பனை மரத்தின் பதனீரில் பனங்கருப்பட்டி தயாரிக்கின்றனர். சாயல்குடி, மாரியூர், கன்னிராஜபுரம், மேலக்கிடாரம், பனைக்குளம் உள்ளிட்ட பல இடங்களில் பனங்கருப்பட்டி தயாரிக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களிடம் மொத்த வியாபாரிகள் கிலோ ரூ.160 முதல் ரூ.180 வரை தரத்திற்கு ஏற்ப வாங்கி வெளி மார்க்கெட்டில் ரூ.250 முதல் ரூ.280 வரை விற்கின்றனர்.

தயாரிக்கும் தொழிலாளர்கள் எதிர்பார்த்த விலையின்றி இழப்பை சந்திக்கின்றனர்.

2022 பட்ஜெட்டில் ரேஷனில் கருப்பட்டி விற்பனை செய்யப்படும் என அரசு அறிவித்தது. இதுவரை அத்திட்டத்தை அமல்படுத்தவில்லை.

இதுகுறித்து சாயல்குடியை சேர்ந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தலைவர் எம். பெத்துராஜ் கூறுகையில், ஏப்., முதல் ஜூன் வரை பனங்கருப்பட்டி சீசன் உள்ளது. இவ்வாண்டு பொங்கல் தொகுப்பில் இடம் பெறும் என எதிர்பார்த்தோம்.அதுவும் இல்லை. இதே போல பனை மரங்களை வெட்டுவதற்கு வருவாய்துறையினர் அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரவும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.

செங்கல் சூளை, ரியல் எஸ்டேட் பணிக்காக தொடர்ந்து பனை மரங்கள் அழிக்கப்படுகின்றன. எனவே ஏற்கனவே அறிவித்தபடி பனை மரங்களை பாதுகாக்கவும், பனங்கருப்பட்டியை அரசே நேரடியாக கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் விற்க வேண்டும் என்றார்.---

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us