/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க கோரிக்கை
/
மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க கோரிக்கை
மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க கோரிக்கை
மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க கோரிக்கை
ADDED : டிச 23, 2025 05:25 AM
ராமநாதபுரம்: மாற்றுத் திறனாளிகளுக்கு தடையில்லா ஓட்டுநர் உரிமம் வழங்க வேண்டும் என காது கேளாதோர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்ட காது கேளாதோர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றனர். தலைவர் சரத்பாபு, துணைத் தலைவர் மகேந்திரன், பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் மணிகண்டன், செயற்குழு உறுப்பினர்கள், மகளிர் குழு நிர்வாகிகள் பதவி ஏற்றனர். தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றினர்.
காது கேளாத மாற்றுத் திறனாளிகள் டூவீலர், கார் ஓட்டுவதற்கு தடையில்லா ஓட்டுநர் உரிமம் வழங்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் வாகனம் என்பதை அடையாளம் காண D குறியீடு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
அனைத்து மாவட்டங்களில் உள்ள தலைமை மருத்துவமனைகளில் காது கேட்கும் திறனை சோதனை செய்யும் கருவியை நிறுவ வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை ரூ.6000 மாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.

