ADDED : மார் 05, 2026 05:26 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்டில் தாய்மார்கள் பாலுாட்டும் அறை கண்ணாடி சேதமடைந்தும், டூவீலர் நிறுத்துமிடமாக மாறி வருவதால் பெண்கள் சிரமப்படுகின்றனர்.
முதுகுளத்துாரில் இருந்து சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, விருதுநகர், ராமேஸ்வரம், திருச்செந்துார் உட்பட பல்வேறு கிராமங் களுக்கு தினந்தோறும் பஸ்கள் இயக்கப்படுகிறது. சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து தினந்தோறும் 5000த்திற்கும் மேற்பட்டோர் காத்திருந்து பஸ்சில் செல்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தாய்மார்கள் பாலுாட்டும் அறை திறக்கப்பட்டு கர்ப்பிணிகளுக்கு பயனுள்ளதாக இருந்து வந்தது.
பாலூட்டும் அறை முறையாக பராமரிக்காததாலும், கண்ணாடி சேதமடைத்தும் திறந்த வெளியாகவும் உள்ளது. பாலுாட்டும் அறை முன்பு டூவீலர்கள், கார்களை நிறுத்துவதால் செல்வதற்கே சிரமப்படுகின்றனர். டூவீலர் நிறுத்துமிடமாக மாறி வருகிறது.
இதனால் பெண்கள் முகம் சுளிக்கின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும், முறையாக பராமரிக்கவும் வேண்டும் என்று பெண்கள் கோரிக்கை விடுத்தனர்.
