/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பொந்தம்புளி மரத்தை பாதுகாக்க கோரிக்கை
/
பொந்தம்புளி மரத்தை பாதுகாக்க கோரிக்கை
ADDED : அக் 24, 2024 05:05 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நொச்சிவயல் தோப்பில் பழமை வாய்ந்த பொந்தம்புளி மரத்தை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து மரத்தை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
மாவட்டத்தில் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், ராமநாதபுரம், தேவிபட்டினம், சேந்தனேந்தல் உள்ளிட்ட இடங்களில் பல நுாற்றாண்டு பழமை வாய்ந்த பொந்தம்புளி மரங்கள் உள்ளன.
ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு உட்பட்ட நொச்சிவயல் தோப்பில் 1000 ஆண்டுகளுக்கும் மேலான பழங்கால பொந்தம்புளி மரம் உள்ளது. இம்மரத்தின் அடியில் தர்மமுனீஸ்வரர் கோயில் உள்ளது. இந்நிலையில் சிலர் மரத்தின் ஒருபகுதியை வெட்டியுள்ளனர். அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தால் பாதியில் விட்டுவிட்டனர்.
ராமநாதபுரத்தின் அடையாளமாக உள்ள பழங்கால பொந்தம்புளி மரங்களைப் பாதுக்காக வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

