/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சவுதியில் படகு மோதி பலியான மீனவர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

ADDED : அக் 19, 2024 05:03 AM

ராமநாதபுரம் : ஆர்.எஸ்.மங்கலம் மோர்ப்பண்ணை மீனவர் பக்ரைனில் மீன் பிடித்து கொண்டிருந்த போது காற்றின் திசை மாற்றத்தினால் சவுதி எல்லைக்குள் சென்ற படகை சவுதி கடற்படை கப்பல் மோதியதில் உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க மீனவர்கள் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
மோர்ப்பண்ணை மீனவர் மருதமலை 37, மீனவர்கள் பக்ரைனில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆக., 5ல் பக்ரைனில் மருதமலை மீன் பிடித்துக்கொண்டிருந்த போது காற்றின் திசை மாற்றம் காரணமாக சவுதி எல்லைக்குள் மீன் பிடி படகு சென்றது. அதனை சவுதி கப்பற்படையை சேர்ந்த கப்பல் படகில் மோதியதில் படகு கவிழந்து மருதமலை உயிரிழந்தார்.
இவரது வருமானத்தை நம்பி மனைவி விஜயசாந்தி 32, 15, 13 வயது மகள், வயதான தாயார் உள்ளனர். இவரது குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும், என கடல் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை மனுவினை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் வழங்கினர்.
கடல் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி கூறுகையில், இலங்கை கடற்படை மோதி உயிரிழந்த தமிழக மீனவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதியாக தலா ரூ.10 லட்சம் வழங்கினார். அதே போல் மருதமலை குடும்பத்தினருக்கும் நிவாரணம் தர வேண்டும் என்றார்.